Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Appa Quotes in Tamil | அப்பா கவிதைகள்

Quotes for Dad in Tamil

தவறி கூட விழவிடாமல், துணை நிற்கும் நண்பன், அப்பா!
பரிமாறிக்கொள்ளும் அன்பு - வார்த்தைகளாக அம்மா... பரிமாறா அன்பு - தைரியமாக அப்பா!
யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத அப்பா, தன் பிள்ளைக்காக கோமாளியாக கூட மாறுவார்!
தான் காணாத உலகத்தை., உயரத்தை... தன் பிள்ளை காணவேண்டும் என்பதற்காக, தலைக்கு மேல் தன் பிள்ளையை தூக்கி சுமக்கும் தகப்பன் சாமிகளுக்கு, ஆயிரம் கோடி வந்தனங்கள்!
மெழுகென உருகி, ஒளியென உயர்வினை தந்து, மறைந்தே வாழும் முன்னறி தெய்வங்களாம்... தந்தையர்கள்!
தரணியில் தன்னிகரற்றது, தந்தையின் பேரன்பு...
ஒரு சொல்லில் "கவிதை" என்றால் அது அம்மா! ஒரு சொல்லில் "சரித்திரம்" என்றால் அது அப்பா..!
தன் பிள்ளைககள் வளர்ச்சியடைய வேண்டும் என்று, தன்னை தேய்த்து கொள்ளும் ஜீவன் அப்பா...
வயிற்றில் சுமந்த உறவு அன்னை என்றால், வாழ்நாள் முழுதும் தோளில் சுமந்த உறவு "தந்தை" மட்டுமே!
மின்சாரம் இல்லா தருணம் சொல்லும், நான் உறங்க, விசிறி அவர் விழித்தது, "அப்பா"
தந்தையின் கைவிரலே, தன் கையென மாறி, தன்னம்பிக்கை ஆனதோ....
ஆடம்பரத்தை விரும்பாத தந்தை, தன் குழந்தையின் ஆசைகளுக்கு மட்டும் தடைகள் போடுவதில்லை!
தன் குழந்தைகளின் இன்பத்திற்காக தனது இன்பத்தை தொலைத்துவிட்டு, விடிந்தும் விடியாமலும் உழைத்து, கண்ணீரை துடைத்து உடல் வலியை மறைத்து, இப்புவியில் வாழும் ஒருவர், அப்பா!
உலகின் அதிசயங்கள் வியந்து பார்க்கும் அதிசயம் அப்பா!
வலிகள் பல தாங்கினாலும் வெளியில் காட்டத் தெரியாத உன்னத சிலை, அப்பா!
திரும்ப கொடுக்க முடியாத கடன், தந்தையிடமிருந்து நாம் பெற்ற அன்பு!
மூச்சுக்கு ஒரு முறை அப்பா என்று அழைத்தது இல்லை; ஏன் என்றால், என் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் அவர் கலந்திருக்கிறார்!
தனது வாழ்க்கை முழுவதும் நடிக்க தெரியாத ஒரே கதாநாயகன், அப்பா!
வலிகள் தெரியாமல் வளர்த்த இன்னொரு தாய், அப்பா!

Close