Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Appa Magal Quotes in Tamil | அப்பா மகள் கவிதைகள்

Father Daughter Tamil Quotes

வழி நடத்தும் மகளுடன், தந்தைக்கும் தெரியும் தைரியத்தை கற்று விடுவாள் என... மகத்துவம் வாய்ந்த கூட்டணி!

I Love My Daughter Quotes in Tamil

ஒரு பெண்ணை எந்த நிலையிலும் ராணியாய் வைத்துப் பார்க்க, ஒரு அப்பாவால் மட்டுமே முடியும்!
யாருக்கும் அடங்காத முரடன் என்று பட்டம் பெற்ற ஆணைக் கூட, தனது செல்ல பார்வையில் அடக்கி விடுகிறாள் அவனின் குட்டி தேவதை!
ஆயிரம் வேதனைகள் இருந்தாலும், தனது மகளிடம் தனது சிரிப்பை உதிர்த்து அவளது ஆனந்தத்தை கண்டு, தனது வேதனை மறந்து மகிழ்வார் தகப்பன்!
கனவுகளில் மட்டுமே கோட்டைகளை கட்டிப் பார்த்தவனுக்கு, ஓர் இரவில் மகாராணியாய் வந்து பிறந்தாய்! மறுநாள் விடிந்த பொழுது, அரண்மனையாக உருமாறிப் போயிருந்தது அவரது சிறு உலகம்!
கணவனிடம் பெண்கள் ராணி ஆகலாம், ஆகாமலும் போகலாம். ஆனால், தன் தந்தை முன் மகள்கள் என்றும் மகாராணியே!

Appa Magal Whatsapp Status

இப்பிரபஞ்சத்தை காக்க சூப்பர் ஹீரோக்கள் இருக்கின்றரா என்று தெரியவில்லை... ஆனால் என்னைக் காத்திட "அப்பா" இருக்கிறார்! - மகள்!
தொப்புள்கொடி பாசமும் தோற்று போய்விடும், அவன் கரங்களை பற்றி பயம் ஏதுமின்றி கர்வமாய் நடந்து செல்கையில்! அப்பா மகள் உறவல்லவா அது!

Close