Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

50+ Life Advice Quotes in Tamil | சிறந்த வாழ்க்கை அறிவுரைகள்

Life Lesson Quotes in Tamil Share Chat

பலரும் வேண்டாத, தேவையில்லாத, தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத நிகழ்வுகளைச் சுமந்து கொண்டு, அதையே பெரிய பிரச்சினையாக எண்ணி, தங்களின் இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள்.

யாருடைய வெற்றியும் உங்களை மனதளவில் பாதிக்கவில்லை என்றால், நீங்கள் நேர்மையாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்!
உனது கவலைகளை ஒருபோதும் மற்றவர்களின் அனுதாபத்திற்காக பயன்படுத்தாதே...
ஏதையாவது கொடுத்து நல்ல பெயர் வாங்க நினைத்தால், அதைக் கொடுக்கும் வரை தான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
விட்டுக் கொடுங்கள், விருப்பங்கள் நிறைவேறும்! தட்டிக் கொடுங்கள், தவறுகள் குறையும்! மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்!
அன்புக்கும், அன்பான பேச்சுக்கும் வேறுபாடுகளைக் கண்டறிந்த பின்தான் யாரை எங்கே நிறுத்த வேண்டுமென்ற சூட்சமத்தை கற்றுக்கொள்வாய்!
முடிவு எடுக்குறதுக்குத் தான் நிறைய யோசிக்கணும், முடிவு எடுத்து பிறகு கூடாது!
ஆசைப்பட்ட பொருள் என்றோ ஒரு நாள் நமக்கு கிடைக்கும். ஆனால், ஆசைப்படும் போது கிடைக்கும் அந்தப் பொருளுக்கு மதிப்பும் மரியாதையும் உயருகிறது.
நம் மரியாதை குறையும் இடத்தில் அளவாக பேசி நம் தகுதியை உணரச் செய்வதே சிறந்தது!
காதல் ஒரு முடிவற்ற மர்மம். ஏனெனில், அதை விளக்கக்கூடிய நியாயமான காரணம் எதுவும் இல்லை. - ரவீந்திரநாத் தாகூர்.
உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம், நம்பிக்கை! அதை அடைய வருடங்கள் ஆகலாம். அது உடைய சில நொடிகளே போதும்!
தேவையில்லாத மூன்று செயல்கள்: 1. கடந்து போனதை நினைத்து இடிந்து போவது. 2. அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து, துவண்டு போவது. 3. அனைவரையும் திருப்திபடுத்த நினைத்து, நம் நிம்மதியை இழப்பது.
வாழ்க்கையில் பாடங்களை கற்றுத் தருவது, பசித்த வயிரும், பணம் இல்லாத வாழ்க்கையும், உடைந்த மனமும் தான்!
எல்லாரிமும் சிரித்த முகத்துடன் பழகு. ஆனால் யாரையும் நம்பாதே.
மொட்டுக்களில் ஒளிந்திருக்கும் 'மலர்' போல, உங்கள் உள்ளங்களில் மறைந்திருக்கும் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.

Life Lesson Tamil Quotes

யார் என்ன சொன்னாலும் உன் பாதையை மாற்றாதே... ஏனெனில் உனக்கு அறிவுரை கூறும் எந்த வாயும் உனக்கு உதவப் போவது இல்லை!
v

Life Advice Quotes in Tamil Words

அடுத்தவரின் குறைகளை களைவதைவிட, நம்மில் இருக்கும் குறைகளை களையெடுக்கலாமே!
தேவைக்கு தொடக்கம் உண்டு! ஆசைக்கு முடிவு இல்லை!
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே! உன் மன நிறைவுக்காக, உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்!
என்றுமே மறக்கக் கூடாத இரண்டு: நன்றி, நன்னெறி
ஒரு விஷயம் கேட்கும் வரை தகவல், பார்க்கும் வரை நிகழ்வு, நமக்கு நடந்தால் அனுபவம். அனுபவபட்டால் மட்டுமே அதன் ஆழமும், வலியும் புரியும்!
கண்காணிக்கப்படாத ஒரு தவறு, அடுத்தடுத்த தவறுகளுக்குப் பாலம் கட்ட செங்கல் எடுத்து வைக்கிறது...
சிந்தித்து செயலாற்று சந்திக்கப் போகும் விளைவுகள் பற்றி!
நண்பன் முன் அன்பைக் காட்டு; முதியவர்கள் முன் பணிவைக் காட்டு; எதிரியின் முன் துணிவைக் காட்டு; துரோகியின் முன், வாழ்ந்து காட்டு!
நல்லோரைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்!
விரிந்த வானைப் போல் திறந்த மனதோடு இரு!
சோகமாக இருக்கும் போது கூட சிரித்து கொண்டே இரு. உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்க கூடும்!
ஒருவரின் அன்பைப் பெற, அவர்களிடம் என்றும் உண்மையாக இருங்கள்!
என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர, அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது!
கொடுப்பது சிறிது என்று தயங்காதே... வாங்குபவர்க்கு அது பெரிது! எடுப்பது சிறிது என்று‌ திருடாதே... இழப்பவர்க்கு அது பெரிது!

Advive Quotes in Tamil Images

அறிவுரை சொல்வதை குறைத்துக் கொள்... உன்னை பிறர் அலட்சியம் செய்வது குறைந்து விடும்...
நட்பாயினும் உறவாயினும் நாலடி தள்ளியே நில்லுங்கள். இடைவெளி உள்ள உறவே, இடையில் விலகாது தொடரும்!
புத்திசாலியாய் இருங்கள்! முட்டாளாய் நடியுங்கள்! வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்!

Close